Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் தகராறு! கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய ஆசாமிகள்!

Advertiesment
சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் தகராறு! கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய ஆசாமிகள்!
, புதன், 16 மார்ச் 2022 (11:17 IST)
பெங்களூரில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட சமையல்காரர் மீது சாப்பிட வந்தவர்கள் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு அருகே பத்ராவதி நகர் பகுதியில் லோகேஷ் என்பவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஓட்டல் அருகே உள்ள மது விடுதியில் மது அருந்திய 5 பேர் அந்த ஓட்டலில் சாப்பிட வந்துள்ளனர். பல அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர்.

அவர்களை ஓட்டல் உரிமையாளர் தடுக்கவே அவரை 5 பேரும் தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த சமையல்காரர் மனோஜ்குமார் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளனர். இதனால் உடல் வெந்து அலறிய அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான 5 பேரில் மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைபாடுடன் இந்தியா - அமெரிக்கா சொல்வது என்ன?