Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தொடங்கிய விஜய் சேதுபதியின் பாலிவுட் படப்பிடிப்பு!

மீண்டும் தொடங்கிய விஜய் சேதுபதியின் பாலிவுட் படப்பிடிப்பு!
, சனி, 26 பிப்ரவரி 2022 (09:12 IST)
அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் புதிய படமான மெர்ரி கிறிஸ்துமஸில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்  ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு இப்போது மெர்ரி கிறிஸ்துமஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் கதாநாயகி காத்ரின கைஃப் கொரோனாவால் பாதிக்கப்பட்டது மற்றும் அவரது திருமணம் ஆகியவற்றால் தள்ளிப்போனது.

இதனால் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார் விஜய் சேதுபதி. அதையடுத்து இப்போது மீண்டும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் அந்த படப்பிடிப்புக்காக மும்பைக்கு சென்றுள்ளார்  விஜய் சேதுபதி. ஒரே கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் ‘நானே வருவேன்’ ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர் அறிவிப்பு!