Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: இருவர் பலி

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (20:40 IST)
பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: இருவர் பலி
பெங்களூரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியானதாகவும் பலியான இருவரும் பெண்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெங்களூரில் உள்ள பன்னார்கட்டா என்ற சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த குடியிருப்பில் திடீரென இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது காற்று பலமாக வீசியதால் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டாவது மாடியில் பால்கனியில் நெருப்பில் சிக்கிய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அதே வீட்டிற்குள் மேலும் ஒரு பெண் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்தப் பெண்ணின் அடையாளம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments