ரயில்வே நிர்வாகம், ரயிலின் டிரைவர்கள் இளநீர் உள்பட சில பொருட்களை பணியின்போது சாப்பிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு ரயில் இன்ஜின் டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரயில் இன்ஜின் டிரைவர்கள் மது அருந்தியுள்ளார்களா என்பதை பரிசோதனை செய்யும்போது, சிலருக்கு ஒருசில காரணங்களால் ஆல்கஹால் பரிசோதனை கருவிகளில் பாசிட்டிவ் ஆகக் காட்டுகிறது. ஆனால், ரத்த பரிசோதனையில் அவர்கள் மது அருந்தவில்லை என்ற முடிவுகள் வருகின்றன.
இதற்கு காரணம், ரயிலின் டிரைவர்கள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர்பானங்கள் உள்ளிட்டவை எடுத்துக்கொண்டதால்தான் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர்பானங்களை பணியின் போது சாப்பிடக்கூடாது என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அப்போதுதான் ஆல்கஹால் பரிசோதனை கருவிகளில் சரியான முடிவு கிடைக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ரயிலின் டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.