தெருவில் தூக்கி வீசப்பட்ட குழந்தையை கடித்து குதறிய நாய் ! பரவலாகும் வீடியோ

சனி, 20 ஜூலை 2019 (15:18 IST)
இன்றைய உலகம் எந்த அளவுக்கு நாகரீகமாக உள்ளதோ...அதே அளவுக்கு அநாகரிகத்தின் உச்சமான கொடுமைகளும் நாளுக்கு நாள் நடந்துகொண்டே இருக்கிறது. ஒருபக்கம் தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் வாசிப்பையும், கலாச்சாரத்தையும் மறந்து நெட்டிசன்களாக வெறுப்பையும் ,வசவுகளையும் சமுக வலைதளத்தில் பதிவிடுகின்றனர்.
மற்றொரு பக்கம் முறையற்ற உறவுகளால் ஆண் - பெண் திருமணம் ஆகாமலேயே பிள்ளையைப் பெற்றுக்கொள்ளுவதும் ,கள்ளக்காதல் செய்து பெற்ற குழந்தையை கொடுமைசெய்து கொல்வதும் அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில் வடமாநிலமான அரியானாவில் அதிகாலைவேலையில் ஒருபெண் தன் பச்சிளம் குழந்தையை தெருவோரமாய் வீசிவிட்டு சென்றுள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து அங்கு வந்த ஒரு நாய், அந்த பச்சிளம் குழந்தையைக் கடித்துக் குதறியது. நல்லவேளையாக அப்போது சிலர் அவ்வழியே வர நாயை துரத்தி குழந்தையை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஆளுநர் பதவியே தேவையில்லாதது – சட்ட சபையில் ஸ்டாலின் கருத்து !