Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா சரவணபவன் ராஜகோபால்?

Advertiesment
தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா சரவணபவன் ராஜகோபால்?
, செவ்வாய், 16 ஜூலை 2019 (08:30 IST)
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி அவர் சரண் அடைய அவகாசம் கேட்டு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அவர் கடந்த 9ஆம் தேதி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். 
 
இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜகோபால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தண்டனைக் கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சை தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி அவரது மகன் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார். 
 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வு,  ராஜகோபாலுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து, ஸ்டான்லி மருத்துவமனையில் தகவல்களைப் பெற்று விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உன்னை கேள்வி கேட்க எவனுக்கும் தகுதி இல்லை: சூர்யாவுக்கு நாஞ்சில் சம்பத் ஆதரவு