மருத்துவ காரணங்களுக்காக ஏழு நாட்கள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்ட நிலையில் அந்த ஜாமின் மனு டெல்லி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக மட்டும் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் ஒன்றாம் தேதி மீண்டும் சிறைக்கு சென்றார். இந்த நிலையில் மருத்துவ காரணங்களுக்காக ஏழு நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்த போது அந்த ஜாமின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது
இதனால் அவர் இந்தியா கூட்டணியின் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது