Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நன்மை செய்த போதிலும் தோல்வியை சந்தித்துள்ளேன்: ஜெகன் மோகன் ரெட்டி ஆதங்கம்..!

Advertiesment
நன்மை செய்த போதிலும் தோல்வியை சந்தித்துள்ளேன்: ஜெகன் மோகன் ரெட்டி ஆதங்கம்..!

Siva

, புதன், 5 ஜூன் 2024 (16:21 IST)
மக்களுக்கு ஏராளமான நன்மை செய்தபோதும் தோல்வியை தழுவியுள்ளேன் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நேற்று ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் முடிவுகள் ஆச்சரியப்பட வைப்பதாகவும் நன்மை செய்த போதிலும் தோல்வியை சந்தித்துள்ளேன் என்றும் அவர் கூறினார்

பெண்களுக்கு நலத்திட்டங்கள், தாய்மார்கள் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூபாய் 15,000, 26 லட்சம் முதியோர்களுக்கு உதவி தொகை , ,மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பணம், பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி, விவசாயிகள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவி என பல்வேறு நன்மைகள் செய்தேன்

என்னுடைய அரசில் நன்மை பெற்றவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர்களுக்கு எனது பாராட்டுக்கள் என்றும் எது நடந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொத்தத்தையும் அண்ணாமலை கெடுத்துட்டாரு: எஸ்.வி.சேகர் விமர்சனம்