Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்: முப்படை தளபதிகள் கூட்டாக பேட்டி

எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்: முப்படை தளபதிகள் கூட்டாக பேட்டி
, வியாழன், 28 பிப்ரவரி 2019 (20:35 IST)
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புல்வாமா தாக்குதல் அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படையின் தாக்குதல், பின் பாகிஸ்தான் அத்துமீறி நுழைந்து தாக்க முயற்சித்த நடவடிக்கை முறியடிப்பு, அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கிக்கொண்டது என இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே பதட்டத்தை அதிகரித்துள்ள நிலையில் சற்றுமுன் முப்படை அதிகாரிகள் ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல், தல்பீர் சிங் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
 
விமானப்படை வீரர் அபிநந்தன் தற்போது ராவல் பிண்டி ராணுவ முகாமில் தங்கவைப்பட்டுள்ளதாகவும், அவர் நாளை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கூறினர். லாகூரில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி அல்லது மும்பை விமான நிலையம் வந்தடைவார் என்றும் கூறினர்.
 
மேலும் பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம் நுழைந்ததை ரேடார் மூலம் அறிந்ததாகவும், விமான தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பல தவறான தகவல்களை கூறி வருவதாகவும், நேற்று பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும், அதனை இந்திய விமானப்படை முறியடித்தது என்றும் கூறினர்.
 
மேலும் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும்,  இந்திய ராணுவம் எந்த சவாலையும் எதிர்கொள்ள முழு அளவில் தயாராகவுள்ளதாகவும், நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளதாகவும் அவர்கல் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜய்சேதுபதி உள்பட கலைமாமணி விருது பெற்றவர்களின் விபரங்கள்