ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

Siva
செவ்வாய், 4 நவம்பர் 2025 (17:05 IST)
பிகானேர் - ஜம்மு தாவி சபர்மதி விரைவு ரயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், சாதாரண படுக்கை விரிப்பு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், இராணுவ வீரர் ஜிக்னேஷ் சௌத்ரி  குத்தி கொல்லப்பட்டார்.
 
ஜிக்னேஷ் சௌத்ரி ரயில்வே பணியாளரான ஜுபைர் மேமனிடம் படுக்கை விரிப்பு கேட்டுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஜுபைர் மேமன் கத்தியால் குத்தியுள்ளார். 
 
ஏசி கோச்சில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இத்தாக்குதலில், வீரர் ஜிக்னேஷின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு அதிக இரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்தார். குற்றவாளியான ஜுபைர் மேமனை ராஜஸ்தான் ரயில்வே காவல்துறை கைது செய்துள்ளது.
 
இந்த ஆண்டு தொடக்கத்தில், உத்தரப்பிரதேசத்தின் சகாரன்பூரில் விடுப்பில் வந்திருந்த இராணுவ வீரர் விக்ராந்த் கூர்ஜர்  சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வழியாக செல்லும் வந்தே பாரத் உள்பட 4 புதிய ரயில்கள்: பிரதமர் தொடங்கி வைத்தார்...

2வது நாளாக மீண்டும் உயரும் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் காரணமா?

மாணவர்கள் கேலி.. கண்டிக்காத ஆசிரியர்கள்.. 9 வயது மாணவி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

உடல் பருமனாக இருந்தால், நீரிழிவு நோய் இருந்தால் விசா கிடையாது: டிரம்ப் அதிரடி

அடுத்த கட்டுரையில்
Show comments