Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாய்ப்பு மறுப்பு ! பிரபல தயாரிப்பாளர் வேதனை !

Advertiesment
ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாய்ப்பு மறுப்பு ! பிரபல தயாரிப்பாளர் வேதனை !
, வியாழன், 30 ஜூலை 2020 (16:46 IST)
பாலிவுட் நடிகர் சுசாந்த் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிகுள்ளாக்கியது. அதன்பிறகு பாலிவுட்டில் வாரிசுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக பலரும் குற்றம் சாட்டினர்.

ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் தனக்கான வாய்ப்புகளை ஒரு கும்பல் பறிப்பாதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். நடிகை தமன்னா தனக்காக விருதுகள் வாரிசுகளுக்கு தரப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் நேற்று கவிஞர் வைரமுத்து ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக டுவீட் பதிவிட்டார்

அதேபோல், வனிதா விஜயகுமார், மீரா சோப்ரா,
பாடகர் ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா மோகன், உள்ளிட்ட பலர் ரஹ்மானுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டு அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில், இங்கேயும் வாரிசு அரசியல் உள்ளது குழு அரசியல்தன்நம்முடன் யார் பணியாற்றவேண்டும் என்பது குறித்து முடிவு செய்கிறார்கள். அதில அவர்கள் மற்றவர்களை அனுமதிக்கவிட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாலிவுட் திறமையானவர்களை வளர விடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது என கே.டி. குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஹ்மான் இசையத்துள்ள பல ஹிட் பாடல்கள் இளைஞர்களை ஈர்க்கும் போது, அவருக்கு வாய்ப்புகள் தர மறுத்துள்ளது எனக்கு வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

கே.டி குஞ்சுமோன் ஜெண்டில்மேன், ரட்சகன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளவ என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தள்ளிப்போகிறது டிவியில் க்ளாஸ்: செங்கோட்டையன்!