பிரபலமான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய விலை குறைவான iPhone 16e மாடலை அறிமுகம் செய்துள்ளது.
உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு ஃபோன்களே அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், விலை அதிகமான ஆப்பிள் ஐஃபோனுக்கு தொடர்ந்து மக்களிடையே ஒரு ஈர்ப்பு இருந்தே வருகிறது. லட்சங்களில் விற்பனையாகும் ஐஃபோன் பலருக்கும் கனவாகவே இருந்து வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையிலான ஒரு மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
iPhone 16 மாடலின் ப்ராசஸரை கொண்ட இந்த புதிய iPhone 16e ஸ்மார்ட்போன் மற்ற மாடல்களை விட குறைவான விலைக்கு அறிமுகமாகியுள்ளது.
iPhone 16e சிறப்பம்சங்கள்
இந்த iPhone 16e மாடல் 3 வகையான மெமரி வேரியண்டுகளில் அறிமுகமாகியுள்ளது. அதன்படி 128 ஜிபி மாடல் ரூ.59,900 ஆகவும், 256 ஜிபி மாடல் ரூ.69,900 ஆகவும், 512 ஜிபி மாடல் ரூ.89,900 ஆகவும் உள்ளது.
அடிப்படையாக விலை நிலவரத்தை பார்த்தால் மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விட இது விலை அதிகம் என்றாலும், ஆப்பிள் ஐஃபோன் மாடல்களோடு கம்பேர் செய்தால் இது குறைந்த விலையே என்பதால் ஐஃபோன் விரும்பிகளிடையே இது வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K