Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

G Pay, PhonePe பரிவர்த்தனைகளுக்கு 1% வரை கட்டணம்.. ஆனா..?

Advertiesment
G Pay, PhonePe பரிவர்த்தனைகளுக்கு 1% வரை கட்டணம்.. ஆனா..?

Prasanth Karthick

, வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (10:49 IST)

மக்கள் GPay, PhonePe உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில் அதில் குறிப்பிட்ட வகை பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில் G Pay, PhonePe, PayTm என பல பணப்பரிவர்த்தனை செயலிகள் இலவச பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகின்றன. இதன்மூலம் மக்கள் கடைகளில் பொருட்களை வாங்குவது தொடங்கி, மின்சார கட்டணம், ரீசார்ஜ் உள்ளிட்டவற்றையும் இந்த செயலிகளின் வழியாக எளிதாக செய்கின்றனர்.

 

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு முதலாக ரீசார்ஜ் பணப்பரிவர்த்தனைகளுக்கு Google Pay கட்டணம் பிடித்தம் செய்யத் தொடங்கியது. தற்போது தங்கள் செயலிகள் வழியாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்தில் பில் செலுத்துபவர்களுக்கு 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை சேவை கட்டணம் பிடிக்க தொடங்கியுள்ளன ஜிபே, போன்பே உள்ளிட்ட செயலிகள். 

 

ஆனால் வழக்கமாக மக்கள் தங்கள் வங்கி கணக்குகளை UPI மூலமாக இணைத்து மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு எந்த வித கட்டணமும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சற்றே குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் ஒரு சவரன் ரூ.64000க்கும் மேல் தான்..!