Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறைந்த விலையில் ஆப்பிள் வெளியிட்ட iPhone 16e! அப்படி என்ன குறைந்த விலை?

Advertiesment
iPhone 16e

Prasanth Karthick

, வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (12:14 IST)

பிரபலமான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய விலை குறைவான iPhone 16e மாடலை அறிமுகம் செய்துள்ளது.

 

உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு ஃபோன்களே அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், விலை அதிகமான ஆப்பிள் ஐஃபோனுக்கு தொடர்ந்து மக்களிடையே ஒரு ஈர்ப்பு இருந்தே வருகிறது. லட்சங்களில் விற்பனையாகும் ஐஃபோன் பலருக்கும் கனவாகவே இருந்து வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையிலான ஒரு மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 

iPhone 16 மாடலின் ப்ராசஸரை கொண்ட இந்த புதிய iPhone 16e ஸ்மார்ட்போன் மற்ற மாடல்களை விட குறைவான விலைக்கு அறிமுகமாகியுள்ளது.

 

iPhone 16e சிறப்பம்சங்கள்

 

  • 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே
  • ஆப்பிள் பயோனிக் ஏ18 சிப்செட் 
  • 48 எம்பி சிங்கிள் ப்ரைமரி கேமரா
  • 12 எம்பி முன்பக்க செல்ஃபி கேமரா
  • ஆக்‌ஷன் பட்டன்கள்
  • ஃபேஸ் ஐடி 
  • ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் சப்போர்ட்

 

இந்த iPhone 16e மாடல் 3 வகையான மெமரி வேரியண்டுகளில் அறிமுகமாகியுள்ளது. அதன்படி 128 ஜிபி மாடல் ரூ.59,900 ஆகவும், 256 ஜிபி மாடல் ரூ.69,900 ஆகவும், 512 ஜிபி மாடல் ரூ.89,900 ஆகவும் உள்ளது. 

 

அடிப்படையாக விலை நிலவரத்தை பார்த்தால் மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விட இது விலை அதிகம் என்றாலும், ஆப்பிள் ஐஃபோன் மாடல்களோடு கம்பேர் செய்தால் இது குறைந்த விலையே என்பதால் ஐஃபோன் விரும்பிகளிடையே இது வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Get Out ட்ரெண்டிங்.. 11 மணி நிலவரம்! காணாமல் போன அந்த ஹேஷ்டேக்!