Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டு.. அவசர அவசரமாக யூடியூப் வீடியோக்கள் நீக்கம்..!

Advertiesment
பாஜக எதிர்ப்பு யூடியூபர்கள்

Siva

, புதன், 20 ஆகஸ்ட் 2025 (07:50 IST)
சமீபத்தில், எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் மீது "வாக்குத் திருட்டு" என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக யூடியூப் தளத்தில், பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளன. 
 
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக சில யூடியூப் சேனல்கள் பல்வேறு காணொலிகளை பதிவேற்றின. ஆனால், அவை போலி தகவல்களை பரப்புகின்றன என உண்மை சரிபார்ப்பு குழுக்கள் கண்டறிந்ததால், அந்த காணொலிகள் தற்போது நீக்கப்பட்டு வருகின்றன. இந்த காணொளிகளை நீக்குவதில் பெரும்பாலானோர் சம்பந்தப்பட்ட யூடியூபர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உதாரணமாக, 2022 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்ட ஒரு பழைய காணொலி, தற்போது நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் முறைகேடாக கையாளப்படுவதாக தவறாக பரப்பப்பட்டது. அது ஒரு பயிற்சி நோக்கத்திற்காகக் கொண்டு செல்லப்பட்ட இயந்திரம் என்று பின்னர் தெரியவந்தது. அதுபோல, பல்வேறு போலி செய்தி கிராபிக்ஸ் மூலம்  மாற்றியமைக்கப்பட்ட காணொலிகளும் யூடியூப் தளத்தில் வெளியாகி, பின்னர் அவை போலி என நிரூபிக்கப்பட்டதால் நீக்கப்பட்டன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 நாட்கள் சிறையில் இருந்தால் 31வது நாளில் பதவி நீக்கம்.. அமித்ஷா தாக்கல் செய்யும் அதிரடி மசோதா..!