பொதுவாக அரசியல் கட்சிக்கு ஆதரவாக தொழிலதிபர்கள் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் பிரச்சாரம் செய்வார்கள் என்பது தெரிந்தது. ஆனால் முதல் முறையாக ஜெகன்மோகன் ரெட்டி தனது கட்சிக்காக பிரச்சாரம் செய்ய சாமானியர்களை களம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக நான்கு இல்லத்தரசிகள், இரண்டு விவசாயிகள், ஒரு ஆட்டோ ஓட்டுனர், ஒரு தையல்காரர், நான்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என 12 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
இவர்கள் ஆந்திரா முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக சாமானியர்களை தேர்வு செய்து பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது ஜெகன்மோகன் ரெட்டி தான் என்று கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ஆந்திராவில் வரும் மே மாதம் 13ஆம் தேதி 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் இங்கே மும்முனை போட்டு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது