Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி தோல்வியடையும்..! பிரஷாந்த் கிஷோர் கணிப்பு..!!

Prasanth Kishore

Senthil Velan

, செவ்வாய், 14 மே 2024 (16:39 IST)
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் என பிரபல தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. அந்த வகையில், மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்துக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
 
ஆந்திர மாநில மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது.
 
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தோல்வியடையும் என பிரபல தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் கணித்துள்ளார். ஆந்திர சட்டசபைத் தேர்தலில் இம்முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றார். 

 
அதேசமயம், RTV வெளியிட்ட கருத்துக்கணிப்பில், சட்டசபைத் தேர்தலில் இம்முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 51 - 67 இடங்களில் வெற்றி பெறலாம். தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி 106+ இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மக்களவை தொகுதிகளை பொறுத்தவரை தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 15 இடங்களும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து..! எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!!