Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாயுடுவின் தூக்கத்தை கெடுக்கும் ஜெகன்!! இன்னும் என்னலாம் செய்ய காத்திருக்காறோ...

Advertiesment
நாயுடுவின் தூக்கத்தை கெடுக்கும் ஜெகன்!! இன்னும் என்னலாம் செய்ய காத்திருக்காறோ...
, வியாழன், 27 ஜூன் 2019 (08:44 IST)
சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் புகார்கள் மீது விசாரணை நடத்தும் படி ஆந்திர முதல் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 
 
நடைபெற்று முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். 
 
அதே சமயம் சந்திரபாபு நாயுடுவை சும்மா விடுவதாய் இல்லை. நேற்று, ஆந்திராவின் முன்னால் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி இடித்து தள்ளினார்.  
webdunia
அந்தவகையில் அடுத்து, தெலுங்குதேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆம், மின்வாரியத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஜெகன் மோகன் ரெட்டி. 
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட மின்சாதனப் பொருட்களை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மின்சாதனப் பொருட்கள் வாங்குவதைல் நடந்த ஊழலையும் விசாரிக்க உத்தவிட்டுள்ளார். 
 
இதோடு நிறுத்தாமல், சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 30 திட்டங்கள் மீது விசாரணை நடத்துவது குறித்து முடிவெடுக்க அமைச்சரவை துணைக்குழுவை ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமமுகவில் விழும் 16 விக்கெட்டுக்கள்: தினகரன் அதிர்ச்சி