Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம்பி வந்த சிறுமி... ஐவருக்கு விருந்தாக்கிய நண்பன்: ஓங்கோலை உலுக்கிய ஓலம்

Advertiesment
நம்பி வந்த சிறுமி... ஐவருக்கு விருந்தாக்கிய நண்பன்: ஓங்கோலை உலுக்கிய ஓலம்
, திங்கள், 24 ஜூன் 2019 (14:48 IST)
ஆந்திர மாநிலத்தில் 16 வயது சிறுமியை 6 பேர் 5 நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தில் 16 வயதான சிறுமி தனது நண்பனை நம்பி அவனது வீட்டிற்கு சென்றுள்ளாள். ஆனால், அங்கு அந்த சிறுமியின் நண்பன தனது வேறு சில 5 நண்பர்களோடு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். 
 
சிறுமியை ஐந்து நாட்கள் ஒரு அறைக்குள் பூட்டி வைத்து சீரழித்துள்ளனர் அந்த 6 பேர். ஐந்து நாட்கள் நரகத்தில் இருந்து ஒருவழியாக அழுத்துக்கொண்டே தப்பிய சிறுமியை வழியில் காவல் அதிகாரி ஒருவர் கண்டு விசாரித்துள்ளார். 
webdunia
அப்போது அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூற சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மீத 5 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 
 
இந்த கொடூர சம்பவம் ஆந்திர பகுதியில் கடும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. ஓங்கோல் எம்எல்ஏ பாலினெனி சீனிவாச ரெட்டி,  மாநில டிஜிபி கவுதம் சேவாக் ஆகியோர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேச்சுரிமைக்கு ஒரு வரம்பில்லையா ? – ரஞ்சித்துக்கு நீதிமன்றம் கேள்வி !