Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருந்தாலும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இவ்வளவு குசும்பு ஆகாது!!!!

Advertiesment
இருந்தாலும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இவ்வளவு குசும்பு ஆகாது!!!!
, ஞாயிறு, 23 ஜூன் 2019 (11:57 IST)
ஆந்திராவின் முன்னால் முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் “ஹெரிடேஜ்” நெய்யால், திருப்பதி தேவஸ்தான பதவியை ஏற்றுகொண்ட ஜெகன் மோகன் உறவினர்.
திருமலா திருப்பதி தேவஸ்தான தலைவராக, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரான சுப்பா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆவார்.

இந்நிலையில் நேற்று சுப்பா ரெட்டி, திருமலா திருப்பதி தேவஸ்தான தலைவராக பதவி ஏற்றார். இந்த நிகழ்வில் சுப்பா ரெட்டி, ஆந்திராவின் முன்னால் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவின் ”ஹெரிடேஜ்” நிறுவனத்தின் நெய்யால் துலாபாரம் செய்தார்.
webdunia
ஹெரிடேஜ் நிறுவனம் சந்திரபாபு நாயுடுவின் மருமகளின் நிறுவனம். ஆதலால் அந்த நிறுவனத்தை கேலி செய்யும் வகையில் இவ்வாறு துலாபாரம் செய்து சுப்பா ராவ் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு, ஜெகன் மோகன் ரெட்டி தான் ஆலோசனை வழங்கியிருப்பார் என்று சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப் படுகிறது.

மேலும் இந்த சம்பவத்தால், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியின் தொண்டர்கள் பெரும் ஆவேசத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன்! ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்