கொரோனா பாதிப்பால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வேலிடிட்டி காலத்தை அதிகப்படுத்தியுள்ளன மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதற்கட்டமாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமலில் இருந்தது. மக்கள் அதிகம் வெளியே வர இயலாது மற்றும் ரீசார்ஜ் செண்டர்களும் இயங்க அனுமதி இல்லை என்பதால் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்வதற்கான வேலிடிட்டி காலத்தை ஏப்ரல் 14 வரை நீட்டித்தன.
இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் வேலிடிட்டி காலத்தையும் மே 3 வரை நீட்டித்து அறிவித்துள்ளன ஏர்டெல் மற்றும் வோடபோன் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள்.