Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து - ஆனந்த் மஹிந்திரா வருத்தம்!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (11:32 IST)
டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்து குறித்து ஆனந்த் மஹிந்திரா வருத்தம்.


டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை என்றும் முன் இருக்கையில் இருந்த இருவர் மட்டும்தான் சீட் பெல்ட் அணிந்திருந்தால் காயங்களுக்கும் உயிர் பிழைத்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சைரஸ் மிஸ்திரி மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து இது குறித்து, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாம் அனைவரும் நம்முடைய குடும்பங்களுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்ற உறுதிமொழியை வெளியிட்டார்.

மேலும் அந்த உறுதிமொழியை நீங்கள் அனைவரும் எடுக்க வேண்டும். சாலையில் பயணிக்கும் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும், தங்கள் பாதுகாப்பை முடிந்த அளவுக்கு உறுதி செய்ய வேண்டும் என்று பொருள்பட அவர் உறுதிமொழியை வெளியிட்டு, அனைத்து மக்களும் அதை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments