Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Advertiesment
Anant ambani

Prasanth Karthick

, ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (10:29 IST)

சமீபத்தில் துவாரகா பாத யாத்திரை சென்ற ஆனந்த் அம்பானி கோழிகளை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கி காப்பாற்றிய சம்பவத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானி. சமீபத்தில் இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட்க்கும் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. தற்போது ஆனந்த் அம்பானி தனது வீடு உள்ள ஜாம்நகரில் இருந்து துவாரகதிஷ் கோயிலுக்கு 170 கிலோ மீட்டர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

 

இன்று ஆனந்த் அம்பானியின் 30வது பிறந்தநாளில் அவர் துவாரகதிஷ் கோயிலில் தரிசனம் செய்கிறார். இதற்காக அவர் நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது அங்கு பிராய்லர் கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை நிறுத்திய அவர், அதில் எத்தனை கோழிகள் உள்ளது என கேட்டு அனைத்தையும் அதன் விலையை விட இரு மடங்கு அதிக விலைக் கொடுத்து வாங்கியுள்ளார். அவற்றிற்கு சுதந்திரம் அளிக்க வாங்கியதாக சொன்ன அவர் ஒரு கோழியை கையில் வைத்துக் கொண்டு பயணித்தார்.

 

இதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ப்ராய்லர் கோழிகள் கறிக்காகதான் வளர்க்கப்படுகின்றன. அந்த பண்ணைக்கோழிகளை விடுதலை செய்வதன் மூலம் ஆனந்த் அம்பானி என்ன உணர்த்த விரும்புகிறார் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் ஆனந்த அம்பானி தனது திருமண விழாவில் அணிந்திருந்த சிவப்பு நிற உடை, முழுவதுமாக முதலையில் தோளில் செய்யப்பட்டது என்றும், அதன் விலை 50 ஆயிரம் யூரோக்கள் என்பதையும் கூறி, கோழியை காப்பாற்றி முதலையை விழுங்குவதுதான் விலங்குகள் மீதான ஜீவகாருண்யமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!