Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தை கடத்தல் வதந்தி - மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கொடூரமாகத் தாக்கிய பொதுமக்கள்

குழந்தை கடத்தல் வதந்தி - மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கொடூரமாகத் தாக்கிய பொதுமக்கள்
, வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (11:05 IST)
பெங்களூருவில் குழந்தை கடத்தல் நபர் என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் மனநலம் பாதித்த நபரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கடத்தல் சம்மந்தமாக பரப்பப்படும் வதந்திகளால் அப்பாவி பொதுமக்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அரசும் எவ்வளவு தான் விழிப்புணர்வு நடத்தினாலும் இதனை புரிந்து கொள்ளாத மக்கள் அப்பாவிகளை அடித்துக் கொள்கின்றனர்.
 
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வைட்பீல்டு அருகே மனநலம் பாதித்த நபர் ஒருவர் சுற்றித் திரிந்தார். அவரை பார்த்த அப்பகுதிவாசிகள் அவரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி, அந்த அப்பாவியை பிடித்து  மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். வலியால் அந்த நபர் அலறித் துடித்தார்.
 
ஆனாலும் விடாத பொதுமக்கள், அவரை கடுமையாக தாக்கினர். இதுகுறித்து கேள்விபட்ட போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக போலீஸார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிரட்டி பார்க்கிறார்கள் ; பயப்படப்போவதில்லை : எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன்