உலகளவில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் பயன்பாட்டிற்குப் பதிலாக மின்சார வாகனங்களுக்ககான தேவை அதிகரித்து வருகிறது.
உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனையில் ஓலா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.
மக்களிடையே இந்த மின்சார் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சாலையில் சென்று கொண்டிருனந்த ஓலா இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பற்றி எரிந்ததது.
இதுபற்றி தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். பிற நிறுவனங்கள் தயாரித்த உதிரி பாகங்களை பயன்படுத்தியதால் இவ்விபத்து நடந்ததாக ஓலா நிர்வாகம் கூறியுள்ளது. இவ்விபத்தில் இருந்து உரிமையாளர் தப்பித்ததாக கூறப்படுகிறது.