உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: பாஜகவினர் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (08:24 IST)
உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று அவர் மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பாஜக தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் அயோத்தி ராமர்கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை. அதன்பின் ஆகஸ்ட் 14 ஆம் தேதி குணம் அடைந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
 
அதன்பின்னர் திடீரென மீண்டும் கடந்த் மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் இறுதியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்
 
இந்த நிலையில், நேற்றிரவு 11 மணிக்கு அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும், அவருக்கு மூச்சுத்திணறல் இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் அமைச்சர் அமித்ஷா மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments