உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் தற்போது 2.67 கோடி பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஊரடங்கு நீக்கப்பட்டு இயல்பு நிலை வந்துவிட்டது போல் தெரிகிறது. வரும் 7ஆம் தேதி முதல் பேருந்து மற்றும் ரயில் ஓடத் தொடங்கி விட்டால் 90 சதவீத இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா நோயின் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. தினசரி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் என்பவர் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2021 ஆம் ஆண்டு வரை இருக்கும் என்று கூறியுள்ளது பெரும் ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வீசுவதாக கூறிய எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் அவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். எய்ம்ஸ் இயக்குனரின் இந்த அதிர்ச்சிக்குரிய தகவல் பொது மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ளது