டெல்லியில் போலியான இன்சூரன்ஸ் நிறுவனம் உருவாக்கி கோடிக்கணக்கில் சிறுவர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 86 வயது முதியவர் ஒருவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் இன்சூரன்ஸ் குறித்த விவரங்களை சொல்லி பணம் செலுத்த வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளனர். அவரும் சூழ்ச்சி தெரியாமல் விவரங்களை கொடுக்க aவரது கணக்கிலிருந்து பணம் மாயமாகியுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.
மோசடி கும்பல் ஒன்று போலியான இன்சூரன்ஸ் நிறுவனம் பெயரில் பலரிடம் தொடர்பு கொண்டு இதுபோன்று வங்கி விவரங்களை கேட்டு பணம் எடுத்துள்ளனர். இந்த குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த அனைவரும் 16,17 வயதுடைய சிறுவர்கள் என்று தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.