Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீப் ஜோக் அடித்த அஜித் பட வில்லன்: ஐஸ்வர்யா ராய் vs எக்சிட்போல்: கடுப்பில் ரசிகர்கள்!!

சீப் ஜோக் அடித்த அஜித் பட வில்லன்: ஐஸ்வர்யா ராய் vs எக்சிட்போல்: கடுப்பில் ரசிகர்கள்!!
, திங்கள், 20 மே 2019 (16:50 IST)
விவேகம், க்ரிஷ் 3 போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் விவேக் ஓபராய். ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலரான இவர் தற்போது நடந்த மக்களவை தேர்தல் கருத்துகணிப்புகளையும், ஐஸ்வர்யா ராயையும் தொடர்புபடுத்தி டிவிட்டரில் போட்ட மீம் தற்போது வைரலாகி வருகிறது.
 
அந்த மீமில் Opinion Poll என்று பெயரிட்டு ஐஸ்வர்யா ராயையும், அவருடைய முதல் காதலர் சல்மான்கானையும் வைத்திருந்தார். இரண்டாவதாக Exit Poll என்று பெயரிட்டு தான் ஐஸ்வர்யா ராயுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து, கடைசியாக Result என்று போட்டு தற்போதைய கணவரான அபிஷேக் பச்சன் மற்றும் குழந்தையோடு அவர்கள் குடும்பமாக இருக்கும் போட்டோவை வைத்து அந்த மீமை ரெடி பண்ணியுள்ளார்.
webdunia





webdunia
webdunia
 
அதற்கு கீழே “இது அரசியல் அல்ல.. வெறும் வாழ்க்கை” என்று பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருவதுடன் பலத்த எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஒரு சக நடிகையின் வாழ்க்கையை கேவலப்படுத்துவது போல விவேக் ஓபராய் வெளியிட்டிருக்கும் இந்த மீமை பலரும் திட்டி வருவதுடன் அவரது ட்விட்டர் பக்கத்தின் கமெண்டிலேயே அதை பதிவு செய்தும் வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய், ரஜினி வரிசையில் சூர்யா.. என்.ஜி.கே-விற்கு கிடைத்த கவுரவம்!