தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி எங்கே போகிறார் என்பது அவரது தாயாருக்கே தெரியாது என பாஜக தலைவர் அமித்ஷா பேசியிருக்கிறார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று நான்காம் கட்டமாக மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்னும் வட மாநிலங்களில் இன்னும் வாக்குப்பதிவு பாக்கியிருப்பதால் அங்கே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனை முன்னிட்டு பாஜக தலைவர் அமித்ஷா உத்தர பிரதேச மாநிலத்தில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர் ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோடை விடுமுறையின் போது மாயமாகிவிடுவார். அப்போது அவர் எங்கு செல்வார் என்பது அவரது தாயாரான சோனியா காந்தியால் கூட கண்டுபிடிக்க முடியாது ’ எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆரம்பித்ததில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தனிநபர் தாக்குதல் நடத்தி வருவது அரசியலில் அநகாரிகப் போக்கை உருவாக்கி வருகிறது.