புயலானது தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாகவும், அது தீவிர புயலாக உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
ஃபானி புயலானது வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரையோரப் பகுதிகளில் வந்து பின்னர் திசைமாறி வடக்கு மற்றும் தெற்கு திசையை நோக்கி நகரலாம் என்று வானிலை ஆய்வு மையமானது அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஃபானி புயல் தொடர்பாக முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பாரத பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்க்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
ஃபானி புயல் தொடர்பாக அனைத்து விவரங்களையும் கேட்டறிந்துள்ளேன். இந்தப் புயலால் பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் ஃபானி புயல் சம்பந்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். அனைவரும் நலம்பெற பிராத்தனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.