அமரிந்தர் சிங் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவர் பேட்டியளித்துள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்துவுக்கு வெளிப்படையான மோதல் போக்கு இருந்து வந்தது. இதனிடையே அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து கடந்த 18 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து சித்துவின் ஆதரவாளரான சரன்ஜித் சிங் முதல்வராக பதவி ஏற்றார்.
இந்நிலையில் அமரிந்தர் சிங் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியானது. இதனால் அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் பேசிக்கொள்ளப்பட்டது. எனவே இது குறித்து அவர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது,
நான் இந்த நிமிடம் வரை காங்கிரஸில் தான் இருக்கிறேன். ஆனால் இனி தொடரமாட்டேன். கட்சியில் தொடர்ந்து நீடிக்கும் வகையில் உரிய மரியாதையை கட்சி எனக்கு வழங்கவில்லை. அதேபோல நான் பாஜகவிலும் இணைய மாட்டேன் என தெளிவுபடுத்தியுள்ளார்.