பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமாவால் ஒரு பாதிப்பும் இல்லை என காங். மேலிடம் தகவல்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்துவுக்கு வெளிப்படையான மோதல் போக்கு இருந்து வந்தது. இதனிடையே அமரீந்தர் சிங், முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து சித்துவின் ஆதரவாளரான சரன்ஜித் சிங் முதல்வராக பதவி ஏற்றார்.
ஆனால் புதிய அமைச்சரவையில் சித்து சார்ந்த சமூக மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் தான் தற்போது சித்து ராஜினாமா செய்து இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் பஞ்சாப் மாநில தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து பதவி விலகலால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அனைத்தும் சுமூகமாக உள்ளதாக மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் தெரிவித்திருக்கிறார்.