Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த 2 நாட்களும் டாஸ்மாக் லீவ்: எப்போ தெரியுமா?

Advertiesment
இந்த 2 நாட்களும் டாஸ்மாக் லீவ்: எப்போ தெரியுமா?
, வியாழன், 30 செப்டம்பர் 2021 (15:54 IST)
தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 19 ஆம் தேதி மிலாடி நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு. 

 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அக்டோபர் 4 முதல் 9 வரை தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 
 
இதைத்தவிர தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் அக்டோபர் 19 ஆம் தேதி மிலாடி நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களும் மதுபாட்டில் விற்பனை கடைகள், பார்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இயல்பைவிட அதிகமழை- வானிலை மையம்