Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மு.க.ஸ்டாலின் என்ன உச்சநீதிமன்ற ஜட்ஜா ? - டி.டி.வி தினகரன் ஆவேசம்!

Advertiesment
மு.க.ஸ்டாலின் என்ன உச்சநீதிமன்ற ஜட்ஜா ?  -  டி.டி.வி தினகரன்  ஆவேசம்!
, புதன், 23 ஜனவரி 2019 (17:26 IST)
கரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட அலுவலகம் திறப்புவிழா மற்றும் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. கரூர் மதுரை டூசேலம் பைபாஸ் ரோட்டில் பேரறிஞர் அண்ணா வளைவு அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர்சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி தினகரன் வருகை தந்து, கட்சி அலுவலகத்தினை திறந்து வைத்தார். 
பின்னர் செய்தியாளர்களுக்கு,பேட்டியளித்தார். அ.தி.மு.க துரோக கட்சி என்பதினால் அதனை தாண்டிநாங்கள் வெகுதூரம் விலகிவந்து விட்டோம், நாங்கள் அ.தி.மு.க வுடன்இணைய அவசியமில்லை, வாய்ப்பும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியஅவர்,. அ.தி.மு.க வினை மீட்ட எடுக்க அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்தீவிரமாக தமிழக அளவில் செயல்பட்டு வருகின்றது. 
 
மேலும் தம்பித்துரைபா.ஜ.க வினை தாக்கி பேசி வருவது எடப்பாடி பழனிச்சாமியை பதவியைவிட்டு தூக்குவதற்காக தான் என்று எண்ணியிருந்த நிலையில்,. தற்போதுஅவர்கள் (தம்பித்துரையும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து தான்) பா.ஜ.கவை தாக்கி பேசி வருகின்றனர்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரைஎடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்து மறைமுகமாக பா.ஜ.க வினை தாக்கிபேசி வருவதாகவும், எனவே, இன்னும் கொஞ்சம் தினங்கள் தான் உள்ளதுபின்னர் தேர்தல் வர இருப்பதினால் இனி மத்திய அரசிற்கு அடங்கி போகவேண்டியதில்லை, எனவே அவர்கள் இருவரும் கூட்டாக தான் சதி செய்துபேசி வருகின்றனர் என்றார்
 
. மேலும் கொடநாடு கொலை வழக்கு குறித்துதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதண்டனை அனுபவித்தே ஆக வேண்டுமென்று கூறியுள்ளாரே என்றுகேட்டதற்கு, ஸ்டாலின் என்ன உச்சநீதிமன்றம் ஜட்ஜா ? என்றும் அவர் தீர்ப்புசொல்வதற்கு ? என்று கூறியதோடு, தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும்தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், எனக்கென்னவோ, சயன், மனோஜ்ஆகியோரின் ஜாமின் கிடைக்க இதுவரை இழுத்து வருவதற்கு தமிழகபோலீஸும், முதல்வரும் சேர்த்து சதி செய்வதால், அதையும், அந்தவழக்கினையும் எப்படி சிலை கடத்தல் பிரிவில் நீதிமன்றம் கூடுதல் கவனம்செலுத்தி கொடநாடு கொலை வழக்கினை கண்காணிக்கவேண்டுமென்றதோடு, இங்குள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிமட்டுமில்லாமல், தமிழகத்தில் உள்ள 20 சட்டமன்ற தொகுதியின்இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வெற்றி பெறும்,தி.மு.க கட்சியானது மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதியின் சொந்ததொகுதியில் போட்டியிட அவரது மகன் பயப்படுவது தான் வேடிக்கையாக உள்ளது.

மேலும் தனது சொந்த தந்தையின் தொகுதியில் 63 ஆயிரம்வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற அதே தொகுதியில் தற்போதையதலைவரும், அவரது மகன் மு.க.ஸ்டாலின் பயப்படுவது ஆளுங்கட்சியுடன்இணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சி.ஆனந்தகுமார்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மானம் மரியாதை எல்லாம் போச்சு.. காசு கேட்டு மேத்யூ மீது வழக்கு தொடர்ந்த எடப்பாடியார்!