Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் மீது சாணி ஊற்றிய மர்மநபர் – முதல்வர் கண்டனம்..

Advertiesment
இயக்குனர் மீது சாணி ஊற்றிய மர்மநபர் – முதல்வர் கண்டனம்..
, வெள்ளி, 25 ஜனவரி 2019 (17:11 IST)
மலையாளத் திரைப்பட உலகின் பிரபல  இயக்குநரான டி.ஆர். பிரியாநந்தனின் வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றித்  தாக்கி விட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

மலையாள சினிமாவின் முக்கிய இயக்குனரும் தேசிய விருது பெற்றவருமான பிரியாநந்தன் சமூக வலைதளங்களில் சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக தனது கருத்துகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளார்.

இதனால் அவர் மீது இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கோபம் அடைந்து உள்ளனர்.  திருச்சூரில் உள்ள வலச்சிரா பகுதியில் அவர் வீட்டின் அருகே வழக்கமாக நடைபயிற்சி செய்யும் நேரத்தில் மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து தாக்கி அவர் மீது சாணியை ஊற்றி அவமானப்படுத்தி இருக்கிறார். அவரைத் தாக்கிய அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இயக்குநர் பிரியாநந்தனிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர் போலிஸாரிடம் ‘இந்த தாக்குதலுக்கு பினனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வை சேர்ந்தவர்கள்  இருப்பார்கள் என சந்தேகிக்கிறேன். என் சிந்தனைகளை பலவீனப்படுத்தவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் பிரியாநந்தன் மீது நடத்தப்பட்ட  இந்த தாக்குதலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை நடத்தியது ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள்தான் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டேட்டிங்கு லீவ் கொடுக்கும் பிரபல சீன நிறுவனம்!