முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் கருப்பு சாயம் பூசியதை அடுத்து அந்த சிலையை காங்கிரஸ் பிரமுகரகள் பாலூற்றி கழுவியதால் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டபோது சீக்கியர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதை கண்டித்து ராஜீவ் காந்தி மற்றும் இந்திராகாந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை திரும்ப பெற வேண்டும் என்று பஞ்சாபில் உள்ள அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அக்கட்சியை சேர்ந்த சில மர்ம நபர்கள் நேற்றிரவு ராஜீவ் காந்தியின் சிலைக்கு கருப்பு சாயம் பூசினர்
இதனையறிந்த காங்கிரஸ் பிரமுகர்கள் உடனடியாக அந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து புனிதப்படுத்தினர். மேலும் ராஜீவ் காந்தி சிலையை அவமரியாதை செய்தவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது