முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்த முடிவை தமிழக அரசே எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி 7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தமிழக கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மீது கவர்னர் இன்னும் முடிவூ எடுக்கவில்லை. இனியும் காலதாமதம் இன்றி கவர்னர் நடவடிக்கை எடுத்து 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.