Publish Date: Wed, 28 Jan 2026 (09:53 IST)
Updated Date: Wed, 28 Jan 2026 (10:19 IST)
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி பகுதியில் அஜித் பவார்(67) பணித்து விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இந்த விபத்தில் அஜித் பவர் மரணம் அடைந்துள்ளார் என தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது. அஜித் பவார், அவரது பாதுகாவலர்கள் இருவர், விமான குழுவினர் இருவர் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா பாராமதி பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததில் அஜித் பவர் உயிரிழந்திருக்கிறார். பாராமதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அவர் சென்றபோது விபத்து நடந்தது தெரிய வந்திருக்கிறது. துவக்கத்தில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 8 45 மணிக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய தலைவராக அஜித் பவார் இருந்தார். மகாராஷ்டிராவில் பெரிய தலைவர்களில் ஒருவராக அஜித் பவார் இருந்து வந்தார். அவரின் மரணத்திற்கு பாஜகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சரத் பவான் அண்ணன் மகன் அஜித் பவார். சரத்பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் தனித்து செயல்பட்டவர் அஜித் பவார்.. நிதி, மின்சாரம் உங்களிடம் பல்வேறு முக்கியத்துறைகளிலும் கவனித்து வந்தவர்.
மகாராஷ்டிரா துணை முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் அஜித் பவார். 1991 முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அஜித் பவார். மகாராஷ்டிராவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக அஜித் பவார் இருந்தார். தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்கவராக அஜித் பவார் இருந்தார்.