Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயணிகள் தப்பு செஞ்சா விமானத்துக்கு தண்டனை! – புதிய உத்தரவு

Advertiesment
பயணிகள் தப்பு செஞ்சா விமானத்துக்கு தண்டனை! – புதிய உத்தரவு
, சனி, 12 செப்டம்பர் 2020 (13:51 IST)
விமானத்தில் பயணிக்கும் பயணிகள் விதிமீறல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணிக்கும் பயணிகள் பலர் விமானத்திற்குள் போட்டோ, வீடியோ எடுப்பது வழக்கமான ஒன்று. இந்நிலையில் விமானத்தில் பறக்கும்போதோ, தரையிறங்கும்போதோ பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க விமான போக்குவரத்து இயக்குனரகம் தடை விதித்துள்ளது.

தடையை மீறி பயணிகள் செயல்பட்டதாக தெரிந்தால் அவர்கள் பயணித்த விமான சேவை நிறுவனத்தின் விமானம் சம்பந்தப்பட்ட வழிதடத்தில் 2 வாரத்திற்கு இயங்குவதற்கு தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கி வெச்சு செல்ஃபி எடுக்க முயற்சி! – குண்டு வெடித்து இறந்த சிறுவன்!