Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லடாக்கின் மலை உச்சத்தை பிடித்த இந்தியா: ஆட்டம் காணும் சீனா?

லடாக்கின் மலை உச்சத்தை பிடித்த இந்தியா: ஆட்டம் காணும் சீனா?
, வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:16 IST)
பாங்காங் ஏரி பகுதியில் சீனாவை விட உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே இந்தியா - சீனா எல்லை பகுதியான லடாக்கில் இரு நாட்டு படையினருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒரு தரப்பில் நடந்த பட கட்ட பேச்சுவார்த்தைகளும் சுமூக முடிவை எட்டாத நிலையில் எல்லையில் படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் இந்தியா - சீனா இடையே மோதலுக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படும் பகுதிகளில் லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் சீனாவை விட உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. 
 
அதாவது பாங்காங் ஏரி பகுதியை சுற்றி பிங்கர் 1 முதல் பிங்கர் 14 வரை பல்வேறு நிலைகள் உள்ளன. இதில் சீனா ஆக்கிரமித்துள்ள பிங்கர் 4 பகுதி மலைத்தொடரை விட மிகவும் உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது சீனா ஆக்கிரமித்து பகுதிக்கு மிக அருகில் உள்ளது. எனவே அடுத்து இந்தியாவின் நகர்வு என்னவென்பதை எதிர்ப்பார்த்து சீனப்படைகள் காத்திருக்ககூடும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெல்ல குறையும் தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!