Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான டிக்கெட் ஜஸ்ட் 1200 ரூபாய்! சலுகை விற்பனையை தொடங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Advertiesment
Air India express

Prasanth K

, திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (11:46 IST)

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘ஃப்ரீடம் சேல்’ தொடங்கியுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான டிக்கெட்டுகளை குறைந்த விலையில் வழங்குகிறது.

 

ஆகஸ்டு 15 இந்தியாவின் 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு நிறுவனங்களும், ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களும் Freedom Sale விற்பனையை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏர் இந்தியா சலுகை விலை டிக்கெட் விற்பனையை தொடங்கியுள்ளது.

 

அதன்படி உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் மிகவும் குறைந்த விலையாக ரூ.1,279 க்கும், பன்னாட்டு விமான டிக்கெட்டுகள் ரூ.4,279க்கும் தொடங்குகிறது. ஆகஸ்டு 19 முதல் மார்ச் 31, 2026 வரையிலான காலக்கட்டத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஆகஸ்டு 15 வரை திறந்திருக்கும் என்றும், ஆகஸ்டு 15க்குள் விமான டிக்கெட் பெறுபவர்களுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

சலுகை விமான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செல்போன் செயலி மற்றும் வலைதளம் மூலமாக புக்கிங் செய்து கொள்ள முடியும்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் அழைப்பு விடுத்த பாஜக.. முடியாது என நிராகரித்த ஓபிஎஸ்..!