Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாள் இறக்கத்திற்கு பின் சற்றே ஏறிய இன்றைய பங்கு சந்தை!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (14:11 IST)
கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்த நிலையில் இன்று பங்கு சந்தை சற்று ஏற்றத்துடன் தொடங்கி உள்ளதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் 
 
இன்று காலை தொடங்கிய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டுமே சற்றே ஏற்றத்துடன் உள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 73.50 ஆக சரிவடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய பங்குச் சந்தையில் பிபிசிஎல், இன்போசிஸ், விப்ரோ, ரிலையன்ஸ், டிசிஎஸ் ஆகிய பங்குகள் ஏற்றத்துடன் உள்ளன. அதே போல் பாரதிஇன்ஃப்ராடெல், ஜீ எண்டர்டெயின்மெண்ட், கிரசிம், பார்தி ஏர்டெல், ஒ.என்.ஜி.சி ஆகியவை இறக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென பங்குச் சந்தை இறக்கத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் அருகே 4 கிராமங்களில் உள்வாங்கிய கடல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பயண திட்டத்தை மாற்றுங்கள்.. சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புபவர்களுக்கு அறிவுரை..!

இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை.. அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு..!

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள்: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments