விமான சக்கரத்தில் அமர்ந்து டெல்லி வந்த ஆப்கன் சிறுவன்! - விமான நிலையத்தில் அதிர்ச்சி!

Prasanth K
செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (09:17 IST)

டெல்லி வந்த விமானம் ஒன்றின் சக்கரத்தில் அமர்ந்து சிறுவன் ஒருவன் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கேஏஎம் விமானம் ஒன்று நேற்று முன் தினம் பயணிகளை ஏற்றிக் கொண்டு டெல்லி புறப்பட்டது. விமானம் டெல்லியில் தரையிறங்கிய பின்னர் அந்த விமானம் அருகே சந்தேகத்திற்கிடமாக சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்துள்ளான்.

 

அவனை பாதுகாப்புப் படையினர் பிடித்துச் சென்று விசாரித்தபோது, சிறுவன் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவன் என தெரிய வந்துள்ளது. காபூல் விமான நிலையத்தில் நுழைந்த சிறுவன் விளையாட்டாக விமானத்தின் நடுப்பகுதி சக்கரம் உள்ள பகுதிக்குள் நுழைந்தபோது விமானம் புறப்பட்டு விட்டதாக கூறியுள்ளான். 

 

விமானத்தை சோதித்த அதிகாரிகள் எந்த சதிசெயலும் இல்லை என உறுதிப்படுத்திய பின்னர் சிறுவனை மீண்டும் விமானத்தில் காபூலுக்கு அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

முறைகேடாக வாக்காளர்களை சேர்ப்பது திமுகவுக்கு கைவந்த கலை: எடப்பாடி பழனிசாமி

ஒவைசிக்கு 6 தொகுதிகள் கொடுக்க மறுத்த இந்தியா கூட்டணி.. 6 தொகுதிகளிலும் ஒவைசி கட்சி முன்னிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments