Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை: செபி அறிவிப்பால் உயரும் அதானி பங்குகள்..!

Mahendran
வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (12:21 IST)
இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அறிவித்ததை தொடர்ந்து, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, “வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
கடந்த 2023-ம் ஆண்டு, அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகள் செயற்கையாக உயர்த்தப்பட்டதாக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டால் அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. இதையடுத்து, செபி இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணையை தொடங்கியது.
 
விசாரணையின் முடிவில், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என செபி அறிவித்துள்ளது. இது குறித்து தனது 'X' பக்கத்தில் பதிவிட்ட கௌதம் அதானி, "ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம். தற்போது, அதை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது" என்று கூறி, தனது பதிவை "வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!" என்று முடித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments