தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரம்யா ராவ்-க்குச் சிறை தண்டனை குறித்த உத்தரவை நீதிமன்றம் வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயிலிருந்து 12.5 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மகள் ரன்யா ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து ரூ.2.67 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும், தண்டனை காலம் முழுவதும் அவருக்கு ஜாமீன் கோரும் உரிமை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.