மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடி 55 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை அளித்த எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்தது.
அதே நேரத்தில், தற்போது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால், ஜவாஹிருல்லாவின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, நீதிபதி தீர்ப்பை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.