Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு நடிகர் விஜயகாந்த் எதிர்ப்பு

Advertiesment
Central Government
, வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (15:07 IST)
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒரு நகரையோ, ஏரியையோ அழிப்பது தவறு என்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை  நகருக்கு அருகில்   தொழிலதிபர் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை  நகருக்கு அருகில்   தொழிலதிபர் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,  ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒரு நகரையோ, ஏரியையோ அழிப்பது தவறு என்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூக வலைதள பக்கத்தில், ‘’காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்க,ம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக தற்போது அது குறித்து  வாய் திறக்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள், மற்றும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்து, மீஞ்சூர்- காடுபள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய இருப்பது அவசியமா? அதானியின் இந்த விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து மத்திய மாநில, அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டிற்கு ஏன் தண்ணீர் தரவேண்டும்? முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி..!