மொபைலில் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் இயங்காது.. மத்திய அரசு அதிரடி..!

Siva
திங்கள், 1 டிசம்பர் 2025 (08:34 IST)
மொபைலில் ஆக்டிவ் சிம்கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ்அப் அக்கவுண்ட் இயங்காது என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இது வாட்ஸ்அப் மட்டும் இன்றி, டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலிகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மொபைலில் உள்ள சிம் கார்டு அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதேபோல் வெப் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக்-அவுட் ஆகிவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்பு ஒருமுறை சிம்கார்டை பயன்படுத்தி லாகின் செய்துவிட்டு, அதன் பிறகு சிம்கார்டை எடுத்துவிட்டால்கூட வாட்ஸ்அப் இயங்கும். ஆனால், இனி மொபைலில் சிம் கார்டு இருந்தால் மட்டும்தான் வாட்ஸ்அப் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைலில் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் இயங்காது.. மத்திய அரசு அதிரடி..!

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.. இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments