Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனை வரவேற்க அபிநந்தன் பெற்றோர் டெல்லி பயணம்!

Advertiesment
அபிநந்தன்
, வியாழன், 28 பிப்ரவரி 2019 (20:51 IST)
தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் அபிநந்தன் நேற்று பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய நிலையில் அவரை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
 
இந்த நிலையில் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் நாளை விடுவிக்கவுள்ளதாக பாகிஸ்தான் பாராளமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார், இதனையடுத்து அபிநந்தன் நாளை டெல்லி வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தமது மகன் அபிநந்தனை வரவேற்க அவரது பெற்றோர் சென்னையில் இருந்து டெல்லி புறப்படுகின்றனர். சென்னையில் இருந்து இன்று இரவு 9.30 மணிக்கு புறப்படும் விமானத்தில் டெல்லி செல்ல அபிநந்தனின் பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்: முப்படை தளபதிகள் கூட்டாக பேட்டி